வாழைச்சேனை ரிதித்தன்ன பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் 3 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

பொலநறுவை - மட்டக்களப்பு வீதியில் வைத்து குறித்த விபத்த இடம்பெற்றுள்ளது.

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர்  மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

17 மற்றும் 18 வயதான இளைஞர்களே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். 

உயிரிழந்த இளைஞர்கள் சுனாமிஜயந்தி மற்றும் ரிதித்தன்ன பகுதியை சேர்ந்தவர்களென பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை விபத்தில் காயமடைந்த நபரொருவர் பொலநறுவை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.