(செ.தேன்மொழி)

கொழும்பு உள்ளிட்ட ஆட்புலக்கம் அதிகமான பகுதிகளில் தற்காலிகமாக வசித்துவரும் அனைவரும் அருகில் இருக்கும் பொலிஸ் நிலையத்தில் பதிவுச் செய்துக்கொள்ள வேண்டும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.இந்தவிடம் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தில் வினவியபோது கூறியதாவது,

கொரோனா நெருக்கடி நிலைமையின் மத்தியில் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றிருந்த அனைவரும் தொழில் நிமித்தம் நகர்புறப் பகுதிகளுக்கு வந்துள்ளமையினால் அவர்கள் தொடர்பில் தகவல்களை அறிந்துக் கொள்ளும் பொருட்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும் சாதகமாக அமையப் பெற்றுள்ளது.

இந்நிலையில் கொழும்பு உள்ளிட்ட ஆட்புலக்கம் அதிகமான பகுதிகளில் தற்காலிகமாக வசித்துவரும் அனைவரும் இம்மாதம் முதல் அருகிலிருக்கும் பொலிஸ் நிலையங்களில் தங்களை பதிவுச் செய்துக் கொள்ள வேண்டும். அதற்கமைய குறித்த பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் குறிப்பிடப்படாதவர்களே இவ்வாறு பொலிஸ் நிலையங்களில் தங்களது பெயர்களை பதிவுச் செய்துக் கொள்ளவேண்டும்.