அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் பொலிஸாரும், தேசிய படையினரும் நடத்திய துப்பாக்கி  பிரயோகத்தில் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

அமெரிக்காவில் பொலிஸாரினால் 46 வயதுடைய கறுப்பினத்தவர் ஒருவர் கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து  மாபெரும் போராட்டத்தில் இடம்பெற்று வருகிறது.

இதன் காரணமாக அமெரிக்காவில் ஏறக்குறைய 40 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது, ஆனால் மக்கள் அவற்றைப் புறக்கணித்துள்ளனர்.

ஊரடங்கு உத்தரவையும் மீறி மக்கள் ஆறாவது நாளாகவும் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்த வண்ணம் உள்ளதால் அங்கு பதற்ற நிலை உருவாகியுள்ளது.

இந்தப் போராட்டங்கள் பல இடங்களில் தற்போது கலவரங்களாக மாறியுள்ளன.

பல பல்பொருள் அங்காடிகள், கடைகள், கட்டிடங்கள் அடித்து நொறுக்கப்பட்டதோடு தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் பல மாகாணங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதால் இதனைக் கட்டுப்படுத்த பொலிஸார் திணறி வருகின்றனர்.

இந்நிலயைிலே, கென்டகி மாகாணத்தில் லூயிஸ்வில்லில்  பொலிஸாரும் தேசிய காவலர் படையினரும் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஆர்ப்பாட்டகாரர்களில்  ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, அமெரிக்கா முழுவதும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுப்பட்ட 4500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.