ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ள நிலையில், அந்த மனுக்களை விசாரணை செய்வதா? இல்லையா? என்பது குறித்து நாளை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும்.

எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்த வர்த்தமானியையும் பாராளுமன்றத்தை கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானியையும் செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல்செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை சற்று நேரத்திற்கு முன்னர் நிறைவுக்கு வந்துள்ளது.

இந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா இல்லையா என்பது தொடர்பிலான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் நாளை பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில் ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில், கடந்த 10 நாட்களாக இந்த மனுக்கள் மீதான பரிசீலனைகள் இடம்பெற்றன.