இலங்கை கிரிக்கெட்டின் 12 நாள் பயிற்சி முகாம் நாளை ஆரம்பமாகின்றது.

இந்த 12 நாள் பயிற்சி முகாமில் இணைந்து இலங்கையை சேர்ந்த 13 தேசிய விளையாட்டு வீரர்களை கொண்ட குழுவினர் ஈடுபடுத்தப்பட்டள்ளனர்.

ஆரம்ப பயிற்சிகளின் போது பந்து வீசும் பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவுள்ளது.

கொழும்பு கிரிக்கட் கழகத்தில் இந்த பயிற்சி கள் முன்னெடுக்கப்படவுள்ளது.

இவ்வாறு பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வீரர்கள் பயிற்சி காலத்தில் விருந்தகங்களில் தங்க வைக்கப்படுவர்.

வீரர்களின் உடல் தகுதிக்கான பயிற்சியினை தொடர்ந்து கள பயிற்சிகள் ஆரமப்பிக்கப்படும்.

நான்கு உறுப்பினர்களைக் கொண்ட குழு பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் உதவி பணியாளர்கள் விளையாட்டு வீரர்களுடன் இணைந்து செயல்படுவர்.

இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் அனைவரது உடல் நலன்கள் விளையாட்டு அமைச்சு மற்றும் சுகாதார தரப்பினரது ஆலோசனைக்கு அமைய பேணப்படும் என “ஸ்ரீலங்கா கிரிக்கட்” தெரிவித்துள்ளது.

இந்த குழுவில்  திமுத்து கருணாரத்ன, சுரங்க லக்மால், கசுன் ராஜித்த, லகிரு குமார, விஸ்வ பெர்னாண்டோ, இசுரு உதான, லசித்த இம்புல்தெனிய, லக்ஷன் சந்தகன், தசுன் சானக்க, ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் நுவான் பிரதீப், வனிது ஹசரங்க, குசல் ஜனித் பெரேரா, தனுஷ்க குணதிலக ஆகியோர் புனர்வாழ்வு பயிற்சிக்குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.