(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் பரவலால் முடக்கப்பட்டிருந்த நாடு மீண்டும் இயங்க ஆரம்பித்திருக்கும் நிலையில், நாட்டுமக்களும் அரசியல் தலைவர்களும் மேலும் அவதானத்துடன் செயற்பட வேண்டியது அவசியமாகும்.

வெளிநாடுகளுடனான உறவை ...

என்று வலியுறுத்தியிருக்கும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பேணாவிடின் மீண்டும் வேகமாக கொரோனா வைரஸ் பரவல் இடம்பெற வாய்ப்பிருக்கிறது என்றும் எச்சரித்திருக்கிறார்.

கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து நாடு முற்றுமுழுதாக முடக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு ஓரளவிற்கு மீண்டும் வழமைபோல செயற்பாடுகள் இடம்பெற ஆரம்பித்திருக்கின்றன. 

இத்தகையதொரு சூழ்நிலையில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கரு ஜயசூரிய தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். 

அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது,

இலங்கை கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதில் ஓரளவிற்கு வெற்றி கண்டிருக்கிறது. எனினும் முடக்கப்பட்டிருந்த நாடு மீண்டும் திறக்கப்பட்டு செயற்பட ஆரம்பித்திருக்கும் நிலையில் நாட்டுமக்களும், தலைவர்களும் மேலதிக அவதானத்துடன் செயற்பட வேண்டியது அவசியமாகும். 

நாம் முன்கூட்டியே சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிடின், எதிர்பாராத வேளையில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் இடம்பெற வாய்ப்பிருக்கிறது என்பதற்கு உலகநாடுகள் பலவும் உதாரணமாக இருக்கின்றன என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.