குதிரை சவாரி செய்யும் எலிசபெத் மகாராணி

By T. Saranya

01 Jun, 2020 | 01:29 PM
image

பிரித்தானிய மகாராணி எலிசபெத் வின்ட்சர் ஹோம் பூங்காவில் உற்சாகமாக குதிரை சவாரி செய்யும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக மகாராணி எலிசபெத் மற்றும் அவரது 98 வயதான கணவர் பிலிப் ஆகியோர் லண்டனுக்கு மேற்கே உள்ள வின்ட்சர் கோட்டையில் வசித்து வருகின்றனர்.

அங்கு தனிமையை போக்கும் விதத்தில் ராணி எலிசபெத் 14 வயதுடைய குதிரை மீது ஏறி சவாரி செய்துள்ளார்.

இந்த கோட்டையில் இருந்து தான் மகாராணி எலிசபெத் தனது 68 ஆண்டு கால ஆட்சியில் தொலைக்காட்சியில் உரையாற்றுவது உட்பட பல அரிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right