அமெரிக்காவில் கடந்த வெள்ளிக்கிழமை கறுப்பின இளைஞர் ஒருவர் அந்நாட்டு பொலிசாரின் தாக்குதலில் பலியானதை அடுத்து அங்கு பெரும் கலவரம் ஒன்று உருவாகி உள்ளது. 

போராட்டக்காரர்களுக்கும்  பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து 13 நகரங்களில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்  பொலிசாருக்கு எதிராக கற்களை வீசித் தாக்கியதுடன் கட்டிடங்கள் வாகனங்களுக்கு தீ  வைத்துக்கொளுத்தினர்.

பதிலுக்கு பொலிசாரும் ரப்பர் குண்டுகளை பிரயோகம் செய்து கண்ணீர் புகை குண்டுதாக்குதலில் ஈடுபட்டனர்.

அமெரிக்காவின் 14 நகரங்களில் ஆயிரத்து 400 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவற்றில் அதிகமானோர் லொஸ்ஏன்ஜல்ஸ் பகுதியைச் சேர்ந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் வெள்ளை மாளிகையையும் விட்டு வைக்கவில்லை. அதற்கு முன்பாக ஜனாதிபதி ட்ரம்புக்கு எதிராகவும் புலனாய்வு பிரிவுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி உள்ளனர்.

பொலிசாரின்  எதேச்சாதிகார  செயற்பாடே, அமெரிக்க நகரம் எங்கும் கலவரங்கள் தோன்றவும் மக்கள் ஜனாதிபதிக்கு எதிராக வெள்ளி மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவும் காரணமாக அமைந்தது.

இதேவேளை வன்முறை ஒருபோதும் பிரச்சினைக்கு தீர்வாகாது, வன் செயல்களில் ஈடுபடுவோர் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவர் என அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார் .

ஏற்கனவே கொரோனா வைரஸ் மரணங்களால் தத்தளித்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவுக்கு, இந்த கலவரங்கள் மேலும் ஒரு தலையிடியை கொடுத்துள்ளன.

அபிவிருத்தி அடைந்த நாடான அமெரிக்காவில் கூட அதிகார துஷ்பிரயோகம், எந்த அளவுக்கு மோசமாக உள்ளது என்பதையே இந்த சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது.

இதன் விளைவுகள் எந்தளவு தூரம் நாட்டுக்குப் பேராபத்தை ஏற்படுத்தும் என்பதையும்  சிந்தித்துப் பார்க்க வேண்டும்.