அமெரிக்காவில் பொலிஸாரினால் கறுப்பின இளைஞர் கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்படும் மாபெரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று லண்டனில் நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்திய லண்டனின் டிராபல்கர் சதுக்கத்தில் மண்டியிட்டு "நீதி இல்லை, அமைதி இல்லை" என்று கோஷமிட்டனர்.

பின்னர் லண்டன் பாராளுமன்றத்தினை கடந்து அணிவகுத்து, லண்டனில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தை நிறைவுசெய்துள்ளனர்.

பல நூறு எதிர்ப்பாளர்கள் பேர்லினில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே பேரணியை நடத்தினர், "ஜோர்ஜ் பிலாய்டுக்கு நீதி",  "எங்களை கொல்வதை நிறுத்து" மற்றும் "யார் கழுத்து" என்று சுவரொட்டிகளை கைகளில் ஏந்தி இருந்தனர்.

திங்களன்று கைது செய்யப்பட்ட பின்னர் ஜோர்ஜ் பிலாய்ட் மரணம் அமெரிக்காவில் எதிர்ப்புக்களைத் தூண்டியுள்ளது, அமெரிக்காவில் குற்றவியல் நீதி அமைப்பில் இன சார்பு குறித்த நீண்டகால கோபத்தை கட்டவிழ்த்துவிட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் போக்குவரத்தைத் தடுத்தது, வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது மற்றும் கலகப் பிரிவு பொலிஸாருடன் மோதியதால் சில பேரணிகள் வன்முறையாக மாறியுள்ளன.

இந்தப் போராட்டம் தீ போல் பரவ அமெரிக்காவில் 16 மாநிலங்களில், லொஸ் ஏஞ்சல்ஸ், அட்லாண்டா. மியாமி,சிக்காக்கோ மற்றும் பிலடெல்பியா உள்ளிட்ட 25 நகரங்களில் ஊரடங்கு அமுலாகியுள்ளது.