இரு நாசாவின் விண்வெளி வீரர்களுடன் இன்று அதிகாலை விண்ணுக்கு அனுப்பப்பட்ட பால்கன் 9 என்ற ரொக்கெட் தற்போது சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்துடன் இணைந்துள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ ட்ராகன் (crew dragon) தற்போது விண்வெளி ஆராய்ச்சி மையத்துடன் இணைந்துள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பல்கான் 9 ரொக்கெட் மூலம் இரண்டு நாசா வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பப்பட்டார்கள்.

இன்று அதிகாலை ஒரு மணிக்கு இந்த ரொக்கெட் அனுப்பப்பட்டது. தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நாசா இந்த சாதனையை செய்தது.

அமெரிக்காவில் புளோரிடாவில் இருக்கும் கென்னடி விண்வெளி ஆய்வு அமையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பல்கான் 9 ரொக்கெட் ஏவப்பட்டுள்ளது.

மொத்தம் 18 மணி நேர பயணத்தை முடித்துவிட்டு இந்த இரண்டு நாசா வீரர்கள் விண்வெளி ஆராய்ச்சி மையத்துடன் இணைகிறார்கள்.

இந்த நிலையில் இன்று இரவு சரியாக 8.00 மணிக்கு விண்வெளி மையத்துடன் க்ரூ ட்ராகன் இணைந்தது.

க்ரூ ட்ராகன் ஸ்பேஸ் ஸ்டேசன் உடன் இணைக்கப்பட்ட பின் மொத்தமாக ஏர் லாக் செய்யப்பட்டது.

இந்த நிலையில் நாசாவை சேர்ந்த பாப் பென்கன் மற்றும் டக் ஹர்லி ஆகிய வீரர்கள் உள்ளே சென்று ஆராய்ச்சிகள் செய்வார்கள்.

இவர்களுக்கு சில உடல் ரீதியான சோதனை செய்யப்பட்ட பின், அவர்கள் பணிகளை தொடங்குவார்கள்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் க்ரூ டிராகன் ஸ்பேஸ் ஸ்டேஷன் உடன் இணையும் போது வீரர்கள் எந்த விதமான பணியையும் செய்யவில்லை. இந்த அனைத்து பணியையும் க்ரூ ட்ராகன் தானியங்கியாக செய்தது.

ஏஐ தொழில்நுட்பம் மூலம் க்ரூ ட்ராகன் தானாக ஸ்பேஸ் ஸ்டேஷன் உடன் இணைந்தது. இதனால் எந்த விதமான தோல்வியும், அசம்பாவிதமும் இதில் ஏற்படவில்லை.

9 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்க மண்ணில் இருந்து இப்படி சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இருந்து முதல் முதலாக விண்ணிற்கு மனிதர்களை அனுப்பிய தனியார் நிறுவனம் என்ற சிறப்பை பெற்றுள்ளது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்.

கடைசியாக அமெரிக்கா ஜூலை 8, 2011 இல் நாசா மனிதர்களை தங்கள் மண்ணில் இருந்து விண்ணுக்கு அனுப்பியது. அதன்பின் இப்போதுதான் அமெரிக்க மண்ணில் இருந்து மனிதர்களை விண்ணுக்கு அனுப்புகிறது.