“இளைஞர்களை  புகையிலை நிறுவனத்தின் தவறான வழிநடத்தலில் இருந்து பாதுகாப்பதுடன், அவர்களை புகையிலை பாவனை மற்றும் புகைப்பொருள் பாவனைகளிலிருந்து தடுப்போம்”. என்பதே இம்முறை உலக புகைத்தல் எதிர்ப்புத் தினத்தின் தொனிப்பொருளாகும்.

புகைத்தலினால் நாளாந்தம் சுமார் 55 இலங்கையர்கள் அகால மரணத்தைத் தழுவிகின்றனர், அதேவேளை வருடத்திற்கு சாரசரியாக 20000 இலங்கையர்கள் மரணிக்கின்றனர். இவ்வாறு புகையிலை நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் தினமும் இறப்பதால் அதனை ஈடுசெய்வதற்கு குறிப்பட்ட நிறுவனம் இளைஞர்களையும், சிறுவர்களையும் பிரதானமாக இலக்கு வைக்கின்றனர். 

சர்வதேச ரீதியில் புகைத்தல் பாவனையினால் 08 மில்லியன் நபர்கள் மரணிக்கின்றனர் என உலக சுகாதார ஸ்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளது. இவற்றுள் 09 இலட்சம் பேர் இரண்டாம் நிலை புகைத்தலினால் மரணிக்கின்றனர். இன்றைய உலகில் மனித சமுதாயத்தின் இது போன்ற கொடூர மரணத்திற்கு  உள்ளாட்டு யுத்தங்களோ அல்லது வேறு எந்த காரணிகளும் தாக்கம் செலுத்தவில்லை என்பது தெளிவாக புலப்படுகின்றது. எனவே,  எவ்வகையான புகையிலை சார் உற்பத்திப் பொருட்களின்  பாவனையும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிற்கு இலாபகரமானது அல்ல. 

மாறாக அபிவிருத்தியடைந்த, வல்லரசு நாடுகளிற்கு மாத்திரமே அவை இலாபம் பயக்கும் என்பது திண்ணம். உலகளாவிய ரீதியில் ஏற்படும் சுகாதார, பொருளாதார, சமூகப் பிரச்சினைகளுக்குக் காரணமாக அமையும் புகையிலை பாவனையை கட்டுப்படுத்துவதற்காக, உலக சுகாதார ஸ்தாபனத்தினால் கடந்த 2003ம்ஆண்டு புகையிலை தடுப்பு தொடர்பிலான சர்வதேச ஒப்பந்தமொன்று (WHO Framework Convention on Tobacco Control - FCTC) கைச்சாத்திடப்பட்டது. இது வரையில் 168 நாடுகள் குறிப்பிட்ட ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன. 2003ம் ஆண்டிலேயே இலங்கை அவ் ஒப்பந்தத்தில்;; கைச்சாத்திட்டமை குறிப்பிடத்தக்கது.

“புகையிலை நிறுவனத்தின் பிழையான வழிகாட்டலில் இருந்து இளைஞர்களையும், சிறுவர்களையும் பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருள் இம்முறை உலக புகைத்தல் எதிர்ப்புத் தினத்தில் அதிகளவில் கவனம் செலுத்தப்படவுள்ளது. சிறு வயது தொடக்கம் பிள்ளைகளின் மனதில்; சிகரட் பாவனை தொடர்பாக சாதகமான சிந்தனையை ஏற்படுத்தி அவர்களை தங்களின்; வாடிக்கையாளர்களாக மாற்றுவதற்கு பல்வேறு வியாபார நுணுக்கங்களையும், விளம்பரங்களையும் சிகரட் நிறுவனம் மேற்கொள்வதனாலேயே இம்முறை இது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. 

மேற்குறிப்பிட்ட விளம்பரங்களிற்கு சிகரட் நிறுவனம் 23 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருடாந்தம் செவழிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. அதே போன்று சிகரட் புகைப்பது இளைஞர்களின் உரிமை என்ற போலியான கூற்றை நம்ப வைப்பதற்காக,  வருடாந்தம் 08 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவழிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

இலங்கையில் இயங்கும் பல்தேசிய புகையிலை நிறுவனம் (CTC) எமது நாட்டின் சிறுவர்களையும், இளைஞர்களையும் ஏமாற்றுவதை நோக்காகக் கொண்டு பல்வேறு தந்திரோபாயங்களை பயன்படுத்துகின்றன. 

அவை, 

சமூக வலைதளங்கள், ஊடகங்கள் வாயிலாக இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் புகையிலை பாவனையை கவர்ச்சிகரமான ஒன்றாக சித்தரித்தல். 

இளைஞர்களை இலக்கு வைத்து புகையிலை நிறுவனத்தில் ஊதியம் பெறுவோர்களினால் சமூக வளைதளங்களில் (Facebook, Instagram, YouTube) விளம்பரப்படுத்தப்படுகின்றது. 

வெவ்வேறு பெயருடைய சிகரட் வகைகள் (Brand Name) வெவ்வேறு வகையான சுவைகள் (Brand Name) அறிமுகப்படுத்தப்பட்டு புகைத்தல் பாவனை கவர்ச்சிகரமாக்கப்படுகின்றது. 

குறைந்த விலைக்கு சிகரட் வகைகளை அறிமுகப்படுத்தல் மற்றும் விலையை அதிகரிக்காமல் தக்கவைத்திருத்தல்

இளைஞர்கள், சிறுவர்கள் அதிகம் செல்லும் இடங்களில் “வயது குறைந்தோருக்கு  விற்பனை தடை” எனும் வாசகத்தை காட்சிப்படுத்துவதன் மூலம் புகைத்தல் மீது மேலும் ஒரு குதூகலத்தை ஏற்படுத்துகின்றனர். 

சமூக வளைதளங்களின் ஊடாகவும் பல்வேறு களியாட்டங்கள் வாயிலாகவும் புகைத்தல் மேலும் கவர்ச்சிப்படுத்தப்பட்டு விளம்பரமாக்கப்படுகின்றது. 

உலக சுகாதார நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் Global Youth Tobacco Survey - GYTS ஆய்விற்கேற்ப, உலகளாவிய ரீதியில் இளைஞர்களின் புகைத்தல் பாவனையானது சடுதியாக குறைவடைந்து வருகின்றது. புகைத்தல் பாவனையில் ஈடுபடுவோரும் அதிலிருந்து விடுதலையாவதற்கு சுயமாக முன்வருகின்றனர் இது மிகவும் சாதகமான நிலைமையாகும். இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு அதிகரித்தமையினால் சிகரட் நிறுவனத்தின் தந்திரோபாயங்களிற்கு அகப்படுவதானது சடுதியாக குறைவடைந்து வருகின்றது.  அத்தோடு சிகரட் நிறுவனத்தின் சூழ்ச்சி நிறைந்த தந்திரோபாயங்களுக்கு எதிரான மாபெரும் எழுச்சியினை இளைஞர்கள் மத்தியில் காண முடிகின்றது. 

இந்த சாதகமான நிலைமையை தொடர்ந்தும் தக்க வைத்துக்கொள்வதற்காகவும், மேலும் இளைஞர்களும், சிறுவர்களும் புகைத்தல் பாவனைக்கு ஈர்க்கப்படுவதைக் குறைத்துக் கொள்வதற்காகவும் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தினால் கீழ்வரும் பரிந்துரைகள் முன்வைக்கப்படுகின்றன.

தனி சிகரட் மற்றும் புகைப்பொருட்களின் விற்பனையைத் தடை செய்தல். 

கல்வி நிறுவனங்களிலிருந்து 100 மீற்றர்களுக்கு இடைப்பட்ட தூரத்தில் புகைப்பொருட்களின் விற்பனையைத் தடை செய்தல்.

 சிகரட்டின் மீதான அதிகரிக்கக்கூடிய குறைந்தபட்ச விலையையேனும் நிர்ணயிப்பதன் மூலம் குறைந்த விலையில் மேற்கொள்ள முனையும் சிகரட் விற்பனையை தடுக்கலாம்.

வெற்றுப்பொதியிடல் முறைமை அங்கீகரிக்கப்படல். (Plain Packaging)

பாடசாலைச் சூழலில் மாணவர்களை ஏமாற்றும் வகையில் ஏற்படுத்தப்படும் அனைத்து விதமான புகையிலை மற்றும் புகைத்தல் விளம்பரங்கள் தொடர்பாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு வழிவகுத்தல்.

இணையத்தின் வாயிலாக மேற்கொள்ளப்படும் விளம்பரங்களை தடுப்பதற்காக புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபை சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளல். அச்சட்டம் மீறப்படும் சந்தர்ப்பங்களில் அது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுத்தல். 

இனிமேலும், எமது நாட்டின் பிள்ளைகளையும், இளைஞர்களையும்; வாடிக்கையாளர்களாக மாற்றி, எமது மனிதவளங்களை நோயாளர்களாக மாற்றி, அதன் மூலம் இலாபம் ஈட்டுவதற்கு பல்தேசிய புகையிலை நிறுவனத்திற்கு இடமளிக்காமல் இருப்போம்.  எமது நாட்டின் இளைஞர்களையும், சிறுவர்களையும் இதிலிருந்து பாதுகாப்பதற்கு நாம் அனைவரும் முன்வர வேண்டும். சிகரட் நிறுவனத்தின் வியாபார தந்திரோபாயங்களை வெளிக்கொணர்ந்து, அந்நிறுவனத்தின் உற்பத்திப்பொருட்களை தவிர்ப்பதற்கு இளைஞர்களையும், சிறுவர்களையும் வலுப்படுத்த வேண்டும்.  

இளைஞர்களை புகைத்தலிற்கு ஆளாக்குவோர் எவராக இருந்தாலும், இனம், மதம், கட்சி பேதமின்றி வெளிக்கொணர வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும்.