திருகோணமலை மொராவேவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மொராவெவ பிரதேசத்தில் இன்று(31.05.2020)இரு சக்கர வாகனத்தில் கடைமைக்கு சென்ற இரானுவ வீரர் இரு சக்கர வாகனம் மின் கம்பத்தில் மோதியதில் மரணமானதாக மொராவெவ பொலிஸார் தெரிவித்தனர். 

மரணமாவர் புலிகண்டிகுளம், கோமரங்கடவல பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் 35 வயதான இரானுவ வீரர் எனவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர். 

மொராவெவ பொலிஸ் நிலையத்தில் இருந்து சுமார் 500 மீற்றர் தூரத்தில் திருகோணமலை வவுனியா வீதியில் இன்று 6.30மணியவில் விபத்து இடம்பெற்றதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து நடந்த பிரதேசத்தில் இருந்து மகதில்வெவ பிரதேச வைத்தியசாலைக்கு இராணுவ வீரரை கொண்டு செல்லும் வழியில் மரணம் நிகழ்ந்துள்ளதாக மொரவெவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

சடலம் தற்போது மகதில்வெவ வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணையை மொராவெவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.