இலங்­கை­யர்கள் பாது­காப்பில் மிகவும் அக்­கறை உள்­ள­வர்­க­ளாக குறிப்­பாக ஒரு குடும்ப அமைப்பில் இலங்கை பெற்றோர் தங்­க­ளது பிள்­ளை­க­ளை பாது­காப்­பதில் உச்­ச­கட்ட கவனம் செலுத்­து­கி­றார்கள். ஆனால், துர­திஷ்­ட­வ­ச­மாக வீதிப் பாது­காப்பு என்று வரும் போது, எங்கள் அன்­புக்­கு­ரி­ய­வர்­களின் பாது­காப்பு குறித்து நாம் பெரிதும் கரி­சனை கொள்­வ­தில்லை. வருமுன் காப்­பது சாலச் சிறந்­தது என்ற முது­மொ­ழியை அறிந்­தி­ருந்தும் பாது­காப்பு விட­யத்­திலும் சிக்­க­னத்தை கடைப்­பி­டிப்­ப­தி­லேயே நாம் கவனம் செலுத்­து­கிறோம்.

எம்­மு­டை­யதைப் போன்று ஒரு வளர்­முக நாட்டில் சொந்­த­மாக கார் வைத்­தி­ருப்­பது ஆடம்­ப­ர­மா­னது என்று பொது­வாக கரு­தப்­ப­டு­கி­றது. அநே­க­மானோர் ஒரு வாக­னத்தை சொந்­த­மாக வாங்கிக் கொள்ள பல வரு­டங்கள் கஷ்­டப்­பட்டு சம்­பா­திக்க வேண்­டிய நிலை இருந்து வரு­கி­றது. ஆனால் அநே­க­மான மக்கள் பாது­காப்பு அம்­சங்­களை முற்­றாக அலட்­சியம் செய்து காரின் எரி­பொருள் சிக்­க­னத்தில் மட்டும் கவனம் செலுத்­து­கி­றார்கள். கச்­சி­த­மான கார்கள் போக்­கு­வ­ரத்து நெருக்­க­டி­களை சமா­ளிப்­ப­தற்கும் மாச­டையும் சூழ­லி­லி­ருந்து தப்­பித்துக் கொள்­வ­தற்கும் பொருத்­த­மா­ன­தாக இருக்­கலாம். அது ஒரு புத்­தி­சா­லித்­த­ன­மான தேர்வாகவும் இருக்கும். அதுவே அவ­சி­ய­மான சகல அம்­சங்­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­தா­கவும் இருக்­கி­றது.

எரி­பொருள் நுகர்வுத் திறன் இயந்­தி­ரத்தின் தொழில்­நட்­பத்­தினால் மட்டும் தீர்­மா­னிக்­கப்­படும் ஒரு விடயம் அல்ல. சில வேளை­களில் அது எடைக்­கு­றைவு, தாழ்­வான அடிச்­சட்­டம், வெளிகப்­புறக் கட்­ட­மைப்பு ஆகி­ய­வற்­றி­னாலும் தீர்­மா­னிக்­கப்­ப­டு­கி­றது. இத்­த­கைய வாக­னங்கள் எரி­பொருள் நுகர்வுத் திறனைக் கொண்­டி­ருக்­கலாம். ஆனால், பல பாது­காப்பு சோதனை­களில் தொல்­வி­ய­டைந்து விடலாம். இதனைத் தவிர, இந்த வகை வாக­னங்­களால் மர­ணத்தை கொண்­டு­வரும் விபத்­துக்கள் மிகவும் அதி­க­ரித்து காணப்­ப­டு­வ­தாக அண்­மையில் எடுக்­கப்­பட்ட புள்­ளி­வி­வ­ரங்கள் தெரிவிக்­கின்­றன.

நீங்கள் வாங்கத் திட்­ட­மிடும் கார் பாது­காப்­பா­னதா என்­பதை துல்­லி­ய­மாக கண்­ட­றி­வ­தற்­கான சிறந்த வழி, காரின் NCAP பாது­காப்பு மதிப்­பீ­டு­களை ஆராய்­வ­தே­யாகும். பிர­ப­ல­மான சகல கார்­க­ளிலும் பாது­காப்பு சோதினை­களை நடத்தும் பிர­தா­ன­மான தரப்­ப­டுத்தல் நிறு­வ­னமே NCAP ஆகும். 5 நட்­சத்­திர NCAP தரப்­ப­டுத்­தலை பெற்­றுள்ள வாக­னங்கள் தற்­போது இலங்­கையில் கிடைக்­கின்­றன. எனவே, அடுத்த தடைவ நீங்கள் ஒரு கார் வாங்கும் போது உங்கள் குடும்­பத்தின் பாது­காப்பில் உங்கள் கவ­னத்தை உங்­களால் செலுத்த முடியும்.

கச்­சி­த­மான கார்கள் சுற்­றாடல் பாது­காப்­புக்கு உகந்த கார்­க­ளாகும். உங்கள் அன்­புக்­கு­ரி­ய­வர்­களின் பாது­காப்­புக்கு ஆபத்தை விளை­விக்கக் கூடிய அதி­கூ­டிய எரி­பொருள் நுகர்வுத் திறனைக் கொண்­டி­ருக்கும் கார்­க­ளிலும் பார்க்க சிறிது குறைந்த எரிசக்தி நுகர்வுத் திறனைக் கொண்டதாக இருந்தாலும் அவைகளே உங்கள் அன்புக்குரியவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதமாக இருக்கும். எனவே, அடுத்த தடவை நீங்கள் ஒரு கார் வாங்கச் செல்லும் போது பணத்தை மட்டும் பெரிதாக பார்க்காமல் புத்திசாதுரியமாக நடந்து கொள்ளுங்கள்.