கொரோனாவிடம் இருந்து தப்பிக்காத படைகள்

31 May, 2020 | 08:26 PM
image

-ஹரிகரன்

“கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக, உலகத்திலேயே இராணுவத்தை பயன்படுத்திய ஒரே நாடு இலங்கை தான். படையினரை இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதன் மூலம், அரசாங்கம் தவறிழைத்து விட்டது. அவர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தவில்லை” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியிருந்தார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் பெரும்பாலானவர்கள் கடற்படையினர் தான்.

இந்தப் பத்தி எழுதப்படும் போது, 728 இற்கும் அதிகமான கடற்படையினர் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. 

மேலதிகமாக 11 இராணுவத்தினருக்கும், ஒரு விமானப்படை அதிகாரிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

உரிய முன்னேற்பாடுகள், பாதுகாப்பு இன்றி, கொரோனா தடுப்பில் கடற்படையினரை ஈடுபடுத்தியதால் தான், இந்த நிலை ஏற்பட்டது என்பதே எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு.

ஆனால், படையினரை – புலனாய்வுப் பிரிவுகளை இந்தப் பணியில் ஈடுபடுத்தியதால் தான், வெற்றிகரமாக கொரோனாவைக் கட்டுப்படுத்த முடிந்தது என்றும், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா என்பன இதனைச் செய்யத் தவறியதால் தான் பேரழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன என்றும் சில வாரங்களுக்கு முன்னதாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன கூறியிருந்தார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் படையினரை ஈடுபடுத்தியதை நியாயப்படுத்தும், அரசாங்கமும், அதனை விமர்சிக்கின்ற எதிர்க்கட்சியுமாக இலங்கையின் நிலைமை போய்க் கொண்டிருக்கிறது,

கொரோனா தொற்றினால் அதிகளவில் படையினர் பாதிக்கப்பட்ட நாடாக இலங்கையே இருக்கிறது என்பது போன்ற தோற்றப்பாடு பலரிடம் உள்ளது. ஆனால் அது தவறான கருத்து.

பல நாடுகள் தமது நாட்டில் படையினர் மத்தியில் ஏற்பட்டுள்ள தொற்றுப் பரவல் தொடர்பான தகவல்களை வெளியிடாமல் மறைத்து வைத்திருக்கின்றன. 

இதனை ஒரு இராணுவ இரகசியமாகவே அந்த நாடுகள் பேணுகின்றன.

போர்கள், பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கொண்டிராத நாடுகள் கூட, இந்த தொற்று தொடர்பான தகவல்களை மறைக்கின்றன 

கொரோனா தொற்று தொடர்பான தகவல்களை மறைப்பதாக குற்றம்சாட்டப்படும் நாடுகளில் சீனா, வடகொரியா, ரஷ்யா போன்றவை முக்கியமானவை. இலங்கையும் அவ்வாறு மறைப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

பொதுவான தொற்று தொடர்பான தகவல்களையே மறைப்பதாக, இந்த நாடுகளின் மீது குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்ற நிலையில், இந்த நாடுகளின் படையினர் மத்தியில் உள்ள தொற்றாளர்கள் பற்றிய உண்மைத் தகவல்கள் வெளியே வருவது என்பது கடினமே.

தமது படையினர் மத்தியில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று பற்றிய தகவல்களை, தெளிவாக வெளியிடும்  நாடு என்று அமெரிக்காவைக் குறிப்பிடலாம். 

இலங்கையும் பாதிக்கப்படும் படையினர் பற்றிய தகவல்களை வெளியிட்டு வருகின்ற போதும், தகவல்களை மறைப்பதான குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்கிறது.

அமெரிக்காவில், கடந்த 28ஆம் திகதி வரையான காலத்தில், அமெரிக்க படைகளில் பணியாற்றும் 9276 பேருக்கு, தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் திணைக்கத்தின் தகவல்கள் கூறுகின்றன.

இவர்களில் அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்தவர்கள், 1295 பேர், விமானப்படையினர் 469 பேர், மரைன் படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் 517 பேர், கடற்படையினர் 2330 பேர், தேசிய காவல்படையை சேர்ந்தவர்கள் 1219 பேர், பாதுகாப்பு திணைக்கள முகவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் 129 பேர் என மொத்தம், 6,168 பேர், அமெரிக்க படைகளில் அங்கம் வகிப்பவர்களாவர்.

ஏனையவர்களில் அமெரிக்க படைகளில் பணியாற்றும் சிவிலியன்கள், தங்கியிருப்போர், ஒப்பந்தகாரர்கள் அடங்கியுள்ளனர்.

தொற்றுக்குள்ளானவர்களில், 32 பேர் உயிரிழந்தனர் அவர்களில், இரண்டு பேர் தான் இராணுவப் படைகளை சேர்ந்தவர்கள்.  ஏனையவர்கள் சிவில் பணியாளர்களும், ஏனையவர்களுமாவர்.

அமெரிக்காவில் படையினர் மற்றும் அதனுடன் தொடர்புடைய கிட்டத்தட்ட 9 ஆயிரம் பேர் தொற்றுக்குள்ளாகியிருக்கும் செய்தி பெரும்பாலும் ஊடகங்களின் கவனத்தைப் பெற்றிருக்கவில்லை.

ஆனால், இலங்கை கடற்படையினர் மத்தியில் 728 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதை மாத்திரம் மிகையானதாக காண்பிக்கும் முயற்சிகள் நடப்பதாக  அரச தரப்பில் ஒரு குற்றச்சாட்டு உள்ளது.

இந்தப் பத்தி எழுதப்படுகின்ற போது அமெரிக்காவில், தொற்று எண்ணிக்கை 17.5 இலட்சத்தையும், உயிரிழப்பு 1.02 இலட்சத்தையும் தாண்டி விட்டது.

அமெரிக்காவில், 17.5  இலட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்ட போதும், அவர்களில் படையினர் வெறும் 9 ஆயிரம் பேர் தான்.

ஆனால், இலங்கையில் 1400க்கும் அதிகமான தொற்றாளர்களில், கடற்படையினர் தான் பாதிக்கும் அதிகம்.

இலங்கை கடற்படையினர் மத்தியிலான தொற்று வீதம், மிகமிக அதிகமாக இருக்கிறது என்பது இதன் மூலம் புலப்படுகிறது.

இலங்கையில் இராணுவம், விமானப்படை, ஏனைய படைப்பிரிவுகள் இருந்தும் கடற்படையினருக்கே அதிக தொற்று ஏற்பட்டிருக்கிறது. இது ஏன் என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது.

இது உலகளாவிய ரீதியாக உள்ள ஒரு போக்கு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

கொரோனா பாதிப்புகள் குறித்து பகிரங்கப்படுத்தியுள்ள நாடுகளில், பெரும்பாலும் கடற்படையினர் தான் அதிகளவில் தொற்றுக்குள்ளாகியிருக்கிறார்கள்.

அதற்குப் போதிய இடவசதிகள் இல்லாததால், கடற்படைக் கப்பல்களில் தொற்று இலகுவாகப் பரவக் கூடும் என்றொரு காரணம், பொதுவாக கூறப்படுகிறது.

அமெரிக்கா, பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து, தாய்வான் ஆகிய நாடுகளின் கடற்படைக் கப்பல்களில் தான் கொரோனா தொற்று இதுவரை பதிவாகியுள்ளது.

இதில் அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் தியோடோர் ரூஸ்வெல்ட், கப்பல் தான் மிக மோசமான பாதிப்பை சந்தித்தது. 

கடந்த மார்ச் மாத இறுதியில் 5000 கடற்படையினருடன் குவாம் தீவுப் பகுதியில் தரித்து நின்ற இந்த விமானம் தாங்கி கப்பலில், பரவிய தொற்றினால், 1156 அமெரிக்க கடற்படையினர் பாதிப்புக்குள்ளாகினர்.

இது தவிர, யுஎஸ்எஸ் பொக்சரில் இருவரும், யுஎஸ்எஸ் எசெக்சில் 3 பேரும், யுஎஸ்எஸ் ரால்ப ஜோன்சன், யுஎஸ்எஸ் கொரொனாடோ, யுஎஸ்எஸ் கார்ல் வின்சன் ஆகிய போர்க்கப்பல்களில் தலா ஒருவரும், யுஎஸ்எஸ் ரொனால்ட் றீகனில் 16 பேரும், யுஎஸ்என்எஸ் கொம்போர்ட்டில், யுஎஸ்எஸ் நிமிட்ஸ், ஆகியவற்றில் தலா இரண்டு பேரும், யுஎஸ்என்எஸ் மேர்சியில் 7 பேரும், யுஎஸ்எஸ் திரிபொலியில் 24 பேரும், யுஎஸ்எஸ் கிட்ஸ் இல், 96 பேரும், யுஎஸ்என்எஸ் குரும்மனில் 52 பேரும் கொரானா தொற்றுக்குள்ளாகினர்.

கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி சிஎன்என் வெளியிட்ட ஒரு செய்தியில், அமெரிக்க கடற்படையின் 26 போர்க்கப்பல்கள் கொரோனா தொற்றினால் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக கூறியிருந்தது. 

எனினும் அவை பற்றிய முழுவமையான தகவல்கள் தெரியவரவில்லை.

அதேவேளை,  1760 கடற்படையினரைக் கொண்ட பிரான்சின் Charles de Gaulle என்ற போர்க்கப்பலில், 1046 கடற்படையினருக்கும், 200 கடற்படையினரைக் கொண்ட Chevalier Paul போர்க்கப்பலில் 35 பேருக்கும், ஏப்ரல் நடுப்பகுதியில் தொற்று ஏற்பட்டது.

இதுபோன்ற நெதர்லாந்தின் நீர்மூழ்கி கப்பலில் 15 மாலுமிகளுக்கு தொற்று ஏற்பட்டது.

இவற்றில் இருந்து, உலகளவில், கடற்படையினர் மத்தியிலேயே தொற்று அதிகம் பரவியுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

அதேவேளை,  பெரும்பாலும் கப்பல்கள் கடலில் பயணம் செய்து கொண்டிருந்த போதே தொற்று ஏற்பட்டது என்பது கவனிக்கத்தக்கது.

ஆனால், இலங்கை கடற்படையில், கப்பல்களில் தொற்று ஏற்படவில்லை. வெலிசற தளத்துக்குள் தான் தொற்று பரவியது. 

அங்கிருந்த கடற்படையினரில்  கணிசமானவர்கள் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

இலங்கை கடற்படையினர் மத்தியில் தீவிரமாக தொற்று பரவியதற்கு அவர்கள் தரப்பில் விடப்பட்ட தவறுகள் தான் காரணம்.

நிபுணர் குழுவொன்ற நடத்திய விசாரணைகளில் அது தெரியவந்திருக்கிறது.

அதனைத் தொடர்ந்தே, வெலிசற கடற்படைத் தளத்தில் இருந்த கடற்படையினரில் பெரும்பகுதியினர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

குவாம் தீவில் யுஎஸ்எஸ் தியோடோர் ரூஸ்வெல்ட், கப்பலில் 4,865 அமெரிக்க கடற்படையினர் இருந்த போது தான் கொரோனா தீவிரமாகப் பரவியது.

இதில்1156 கடற்படையினருக்கு தொற்று ஏற்பட்டது.

கிட்டத்தட்ட வெலிசற கடற்படைத் தளத்திலும் அதே அளவு கடற்படையினர் தான் இருந்தனர். 

அவர்களில், 728 பேருக்கே தொற்று ஏற்பட்டுள்ளது  என்று ஆறுதலடைய முடியாது.

ஏனென்றால், யுஎஸ்எஸ் தியோடோர் ரூஸ்வெல்ட், ஒரு விமானம் தாங்கி கப்பல். வெலிசற தரையில் உள்ள ஒரு தளம். 

கப்பலில் தொற்றை கட்டுப்படுத்துவதை விட தரையில் அதனைச் செய்வது இலகுவானது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22