சோமாலியாவில் குண்டு வெடிப்பு ; மரண வீட்டுக்கு பஸ்ஸில் சென்ற 6 பேர் பலி

Published By: Digital Desk 3

31 May, 2020 | 06:09 PM
image

சோமாலியா தலைநகரம் மொகாடிசு அருகில் வீதியோரம் குண்டொன்று வெடித்தலில் சிறிய பஸ் ஒன்று அதில் சிக்கியுள்ளது.

குறித்த பஸ்ஸில் பயணித்த 6 பயணிகள் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் நகரத்திலிருந்து பஸ்ஸில் மரண வீட்டுக்குச் சென்றவேளை மொகடிசுவில் இருந்து வடமேற்கே 19 கிலோமீற்றர் தொலைவில்  உள்ள ஹவா அப்தி கிராமத்தில் குண்டு வெடிப்பிற்கு உள்ளானது.

"குண்டுவெடிப்பில் ஆறு பேர் உயிரிழந்தனர். உயிரிழப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

குண்டு வெடிப்பு இடம்பெற்ற வீதி பெரும்பாலும் அரச மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் அதிகம் பயன்படுத்தும் வீதியாகும்.

எந்தவொரு குழுவும் உடனடியாக குறித்த சம்பவத்திற்கு உரிமை கோரவில்லை.

1991 ஆம் ஆண்டு முதல் சோமாலியாவில் மோதல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. 

2008 ஆம் ஆண்டு முதல், இஸ்லாமிய போராளிகள் குழு அல் ஷபாப் சோமாலியாவின் மத்திய அரசாங்கத்தையும் அதன் சொந்த ஆட்சிக்கு எதிராக போராடி வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போதை பொருள்கள் இல்லாத தமிழ்நாடு :...

2026-08-11 16:32:23
news-image

ஆங் சான் சூகி விடுதலை கோரிக்கையை...

2026-08-11 11:55:01
news-image

ஐந்து இலட்சத்தை காலி செய்த கரையான்...

2026-08-11 10:53:34
news-image

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 132 பேர்...

2026-08-11 09:17:21
news-image

இந்தியாவில் மதுபோதையில் இளைஞர்கள் செலுத்திய கார்...

2026-08-10 17:07:08
news-image

புற்றுநோயுடன் போராடும் ஜோ பைடன் ;...

2026-08-10 16:26:11
news-image

ஒரே படகில் 230 குடியேற்றவாசிகள் ஆங்கிலக்...

2026-08-10 16:11:05
news-image

தாய்லாந்திலிருந்து இந்தியா சென்ற விமானம் நடுவானில்...

2026-08-10 15:31:27
news-image

குஜராத் மாநிலத்தில் கிணற்றில் ‘தானாகவே அலைபாயும்...

2026-08-10 15:19:57
news-image

சீனாவில் டொல்பின் சூறாவளி : ஷாங்காய்...

2026-08-10 13:29:56
news-image

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதலிடம் :...

2026-08-10 13:14:46
news-image

போரை நிறுத்துவதற்கு ட்ரம்ப் எடுத்த அதிரடித்...

2026-08-10 12:34:46