(சிவலிங்கம்சிவகுமாரன்)

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொட்டகலை காங்கிரஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இன்று பிற்பகல் 1.30 அளவில் தகனம் செய்வதற்காக நோர்வூட் தொண்டமான் விளையாட்டு மைதானத்துக்கு ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.

 

கொட்டகலை, அட்டன், டிக்கோயா,நோர்வூட், நகரங்கள் உட்பட பல இடங்களிலும் வௌ்ளைக்கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு, மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் உருவப்படத்தை வைத்து வழிநெடுகிலும் அஞ்சலி செலுத்தி வந்த மக்கள், அவரது பூதவுடல் தாங்கி வந்த ஊர்திக்கு வீதியில் இருப்பக்கமும் இருந்து மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள்.

வீதியின் இருபுறமும் விசேட அதிரடிபடையினர் , இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தனர். பூதவுடல் தாங்கிய பேழையை வைத்து அஞ்சலி செலுத்துவதற்காக விசேட மேடை ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.