(இராஜதுரை ஹஷான்)

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட 5000 ரூபாய் நிவாரண நிதி தொடர்பில் இதுவரையில் 44,767 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொருளாதார  முன்னேற்ற திட்டமிடல் மற்றும் வறுமை ஒழிப்பு ஜனாதிபதி செயலணி குறிப்பிட்டுள்ளது.

5000 ரூபா நிவாரண நிதி கிடைக்கப்  பெறாதவர்கள், நிதி மோசடி உள்ளிட்ட முறைப்பாடுகள் இவ்வாறு கிடைக்கப் பெற்றுள்ளன.

இந்த முறைப்பாடுகள் தொடர்பில் பரிசீலனை செய்யுமாறு செயலணியின் தலைவர் பஷில் ராஜபக்‌ஷ  அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

5000 ரூபா நிவாரண நிதி தொடர்பில் களுத்துறை மாவட்டத்தில் 5000ற்கும் அதிகமான முறைப்பாடுகளும்,கொழும்பு மாவட்டத்தில் 4000 ஆயிரம் முறைப்பாடுகளும், கேகாலை மாவட்டத்தில் 2033 முறைப்பாடுகள், கண்டி மாவட்டத்தில் மிக குறைவாக 176 முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளன.