(இராஜதுரை ஹஷான்)

புகையிரத சேவையினை பயன்படுத்தும் பயணிகள் மார்ச் மாத பருவகால அட்டையினை ஜூன் மாதம் 3 ம் திகதி வரை மாத்திரமே பயன்படுத்த முடியும்.

நாளை 33 புகையிரதங்கள்  போக்குவரத்து சேவையில் ஈடுப்படுத்தப்படவுள்ளதாக புகையிரத சேவை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

புகையிரத திணைக்கள பொது முகாமையாளர்  டிலந்த பிரனாந்து குறிப்பிடுகையில்,

அத்தியாவசிய சேவைகள் நிமித்தம்  புகையிரத  போக்குவரத்து சேவையினை பயன்படுத்த நிறுவனங்கள் ஊடாக இதுவரையில் 19,593 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மட்டுப்படுத்தப்பட்டிருந்த புகையிரத சேவை தற்போது  கட்டம் கட்டமாக வழமையான நிலைக்கு திரும்பியுள்ளது.

மார்ச் மாதம் புகையிரத போக்குவரத்து பயண பருவ கால அட்டையினை பெற்றுக் கொண்டவர்கள் ஜூன் மாத அட்டையினை இம்மாதம் 3 ஆம் திகதிக்குள் பெற்றுக் கொள்ள வேண்டும்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சுகாதார தரப்பினர் குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு, சுகாதார அறிவுறுத்தல்கள் தொடர்ந்து புகையிரத சேவையில் செயற்படுத்தப்படும் என்றார்.