நியூ ஹார்சான் விண்கலத்தால் எடுக்கப்பட்ட புளுட்டோ கிரகத்தின் படங்கள் வெளியாகியுள்ளன.

நியூ ஹார்சான் விண்கலத்தால் எடுக்கப்பட்ட மிகத் தெளிவான புளுட்டோ கிரகத்தின்   புகைப்படங்கள் அடங்கிய முதல் தொகுதியை தற்போது நாசா   வெளியிட்டுள்ளது.

விண்வெளி ஆராய்ச்சியில் முன்னிலையில் திகழும் நாசாவிற்கு இவ்வருடம் புளுட்டோ கிரகம் முக்கிய இடம்பிடித்துள்ளது.

நாசாசவால் புளுட்டோவில் தெரியும் இதய வடிவம் குறித்தும், அங்குள்ள நிலவுகள் குறித்தும் ஆச்சரிய தகவல்களை சில மாதங்களுக்கு முன் வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இப் புதிய படங்கள் புளுட்டோ கிரக ஆராய்ச்சிற்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.