(எம்.மனோசித்ரா)

கொரோனா வைரஸ் பரவலில் நாடு வழமைக்கு திரும்பியுள்ளதால் பலமான தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்று தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன , பொதுத் தேர்தலில் பாரியதொரு வெற்றி உறுதியாகும் என்றும் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியாக மாத்திரமின்றி ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன என்ற பலமான கூட்டணியை அமைத்திருக்கிறது. இந்த கூட்டணி மூலம் வெற்றிகரமான பலமாக தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம்.

அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்னரே தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் ஆயத்தப்படுத்தப்பட்டன. ஆனால் வைரஸ் பரவல் தீவிரமடைந்தமையால் அவற்றை முன்னெடுக்க முடியாமல் போனது.

எனினும் தற்போது நாடு வழமைக்குத் திரும்பியுள்ளதால் மிகத் தெளிவான பலமான தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியும்.

கேள்வி : எனினும் தேர்தலுக்கு இது பொறுத்தமான சந்தர்ப்பம் அல்ல என்று எதிர்க்கட்சி குற்றஞ்சுமத்துகின்றதே ?

பதில் : எதிர்க்கட்சி என்றால் அவ்வாறு தான் செயற்படும். அதுவே எதிர்க்கட்சியின் கொள்கையாகும்.

கேள்வி : எதிர்க்கட்சியின் பிளவைப்பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன ?

பதில் : அதனை அவர்களே பார்த்துக் கொள்ள வேண்டும். அது பற்றி எம்மால் கவனம் செலுத்த முடியாது. எமக்கு எமது வேலைகளைப் பார்க்க வேண்டியுள்ளது.

கேள்வி : பொதுத் தேர்தலில் உங்களுக்கு வெற்றி உறுதியா ?

பதில் : ஆம். மிகப் பாரிய வெற்றி ஸ்திரமானதாகும் என்றார்.