உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 61 இலட்சத்தை தாண்டியது. இதேவேளை, இந்தியாவில் நேற்று மாத்திரம் 205 பேர் பலியாகியுள்ளதுடன் 181,827 பேர் கொரோனா தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். 5, 185 பேர் இதுவரை கொரோனா தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர்.

பலியானோரின் எண்ணிக்கை 371,006ஆக உயர்ந்துள்ள நிலையில், இதுவரை 27 இலட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 53,503 பேர் வைத்தியசாலைகளில் ஆபத்தான கட்டத்தில் உள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18,16,820 ஆக உயர்ந்துள்ளது.

அதுபோல் பலியானோர் எண்ணிக்கை 1,05,557 ஆகியுள்ளது.

பிரேசிலில் 4,98,440 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இங்கு பலி எண்ணிக்கை 28,834 ஆனது.

ரஷ்யாவில் 3,96,575 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இங்கு பலியானோர் எண்ணிக்கை 4,555 பேராக உள்ளது.

ஸ்பெயினில் 2,86,308 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரிட்டனில் 2,72,826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இங்கு பலி எண்ணிக்கை 38,376 பேர் பலியாகிவிட்டனர். 

இத்தாலியில் 2,32,664 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இங்கு பலி எண்ணிக்கை 33,340 பேர் ஆவர்.

பிரான்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,88,625 பேராவர். இங்கு பலியானோர் எண்ணிக்கை 28,771 பேராகும். 

ஜெர்மனியில் 1,83,294 பேராவர். இங்கு கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 8,600 ஆனது. இந்தியாவில் கொரோனாவால் 1,81,827 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 சீனாவை காட்டிலும் அதிகமாகமாக, இங்கு பலி எண்ணிக்கை 5,185 அதிகரித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.