சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு நாசா விண்வெளி வீரர்களை ஏற்றிக்கொண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ரொக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

நாசாவின் இரண்டு விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பல்கான்  9 ரொக்கெட் அமெரிக்காவில் புளோரிடாவில் உள்ள கென்னடி ஏவு தளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது.

கடந்த 8 ஆம் திகதி குறித்த இரு விண்வெளி வீரர்களுடன் குறித்த ரொக்டெ் விண்ணுக்கு செல்ல விருந்த போதிலும் கடந்த வாரம் கடும் மழை காரணமாக விண்வெளிக்கு ரொக்கெட் ஏவும் திட்டம் பிற்போடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த திட்டம் இன்று வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதுடன் ரொக்கெட்டும் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. 

இதில் நாசாவை சேர்ந்த பொப் பென்கன் மற்றும் டக் ஹர்லி ஆகிய இரு விண்வெளி வீரர்கள் விண்ணுக்கு சென்று நாளை காலை 10.30 மணியளவில் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறார்கள்.

 

இந்த நிகழ்வில் அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் கலந்து கொண்டார். ரொக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்ததும் நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன ஊழியர்கள் தங்கள் மகிழ்ச்சியை ஆரவாரத்துடன் வெளிப்படுத்தினர்.

9 வருடங்களுக்கு பின்னர் அமெரிக்க மண்ணில் இருந்து முதல் முறையாக மனிதர்களை ஏற்றிக்கொண்டு ரொக்கெட் புறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.