சிலாபம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பங்கதெனிய வெஹரகெலே பகுதியில் இன்று (30) இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த ஐவரும் வேனில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்தவர்கள் எனவும் இவர் சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று வீதியில் பயணிக்க முற்பட்ட போது, பின்பக்கமாக அதிவேகத்தில் பயணித்த டிப்பர் வண்டி எதிரே வந்த வேன் மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்தை ஏற்படுத்தும் காட்சி அருகில் பொருத்தப்பட்டுள்ள சீ.சீ.ரி.வி கமராவில் பதிவாகியுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனம் மற்றும் முச்சக்கர வண்டி ஆகியவற்றின் சாரதிகள் சிலாபம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிலாபம் போக்குவரத்து பொலிஸார் விபத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.