உலக சுகாதார நிறுவனத்துடனான உறவை முடித்துக் கொள்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸின் தீவிரத்தன்மை குறித்து பிற நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்காமல் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக உலக சுகாதார அமைப்பு மீது டொனால்ட் ட்ரம்ப் கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார். 

இந்நிலையில்,  உலக சுகாதார அமைப்புடனான உறவை அமெரிக்கா துண்டித்துக் கொள்கிறது என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது,

சீனாவின் பிடியில் உலக சுகாதார அமைப்பு சிக்கியுள்ளது. ஆண்டுக்கு 450 மில்லியன் டொலர் வழங்கி வந்த அமெரிக்காவின் உறவை விட ஆண்டுக்கு 40  மில்லியன் டொலர்களை கொடுக்கும் சீனாவுடன் உலக சுகாதார அமைப்பு உறவு வைத்துள்ளது. 

இதனை உடனே  திருத்திக்கொள்ளுமாறு உலக சுகாதார அமைப்பினை வலியுறுத்தியும் அது செவி சாய்க்கவில்லை.

அந்த அமைப்புடனான உறவை அமெரிக்கா துண்டித்துக்கொள்கிறது. அந்த அமைப்பிற்கு வழங்கும் நிதியை வேறு சுகாதார அமைப்பிற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.