(செ.தேன்மொழி)

கொஹூவலை பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொஹூவலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எஸ்.டீ.பீ.ஜயசிங்க மாவத்தையில் நேற்று வெள்ளிக்கிழமை பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினர் முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

பிளியந்தலை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் , இவரிடமிருந்து 154 கிராம் 220 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஹுவலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.