(செ.தேன்மொழி)
கல்கிஸ்ஸ - சொய்சாபுர பகுதியில் உணவகமொன்றின்மீது துப்பாக்கி பிரயோகிக்கப்பட்டபோது , உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என்று குற்றச்சாட்டில் கல்கிஸ்ஸ பொலிநிலையத்தில் பணிபுரிந்து வந்த கான்ஸ்டாபில் இருவர் உட்பட மூன்று பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சொய்சாபுர பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு இனந்தெரியாத நபர்களாலே இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
சொய்சாபுர மைதானத்திற்கருகிலிருந்து காரில் வந்துள்ள நபர்கள் உணவகத்தின் மீது துப்பாக்கி சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். சம்பவத்தின் போது அவ்விடத்திலிருந்த சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுப்பட்டிருந்த கான்ஸ்டாபில்கள் இருவர் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மூவரும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனும் பேரிலே இவ்வாறு பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் தங்களது கடமையை செய்ய தவறியுள்ளார்கள் எனும் பேரிலேயே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM