(எம்.மனோசித்ரா)

தீவிரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான செயற்பாட்டில் விசேட அதிரடிப்படையின் பங்கு அளப்பரியதாகும் என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

விசேட அதிரடிப்படை தலைமையகத்திற்கான விஜயத்தை மேற்கொண்ட இதனைத் தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர் மேலும் கூறுகையில்,

பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் செயற்பாடுகளை வெற்றிகரமாக முறியடித்ததன்மூலம் அவர்கள் தமது ஆளுமைகளை நிரூபித்துள்ளனர்.

இலங்கை பொலிஸாரின் விசேட படைப்பிரிவாக மிளிரும் விசேட அதிரடிப்படையினர், ஒரு சட்ட அமுலாக்க அதிகாரியாக மட்டுமல்லாமல் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிராக போராடுவதிலும் பயிற்சி பெற்ற ஒரு சக்தியாக உள்ளனர் என்றார்.