எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு பொருத்தமான வீடு தேடும் படலம் தொடர்கிறது என  அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார். 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கான உத்தியோகபூர்வ வாசஸ்த்தல நிர்மாணப் பணிகள் முடிவடையும் தறுவாயில் உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ஊடகவியலளார் ஒருவர் எதிர்க் கட்சித் தலைவர்  சம்பந்தனுக்கு உத்தியோகபூர்வ வாசஸ்த்தலம் வழங்கப்பட்டதா எனக் கேட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அமைச்சர் கயன்த கருணாதிலக இவ்வாறு பதிலளித்தார். 

அமைச்சர் தனது பதிலில் மேலும் கருத்து தெரிவிக்கையில், 

எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு உத்தியோகபூர்வ வாசஸ்த்தலம் பெற்றுக் கொடுப்பதற்காக நான்கு வீடுகள் காண்பிக்கப்பட்டன. இவை அனைத்திலும் மேல் மாடிகள் இருப்பதால் தனக்கு பொருத்தமாக அமையாது. கீழ் வீடே தனக்கு தேவையெனக் கூறி எதிர்க்கட்சித் தலைவர் நிராகரித்துவிட்டார். 

எனவே அவருக்காக வீடுதேடும் படலம்  நடைபெற்று வருகின்றது. அதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கான உத்தியோகபூர்வ வாசஸ்தலம் நிர்மாணிக்கும் பணிகள் முடிவும் தலைவாயில் உள்ளது. விரைவில் முன்னாள் ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வ வாசஸ்தலம் கையளிக்கப்படும் என்றார்.