அரச இணையத்தளங்கள் மீது இன்று காலை சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொது நிர்வாக அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றின் இணையத்தளங்கள் மீதே குறித்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனை உறுதிப்படுத்தியுள்ள இலங்கை விமானப் படையின் தொழில்நுட்பப்பிரிவு, தமிழீழ சைபர் படையணி என்ற பெயரிலான குழுவினால் குறித்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.