வெலிகம பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. 

இன்று காலை, வெலிகம - மிரிஸ்ஸவிலுள்ள மீன்பிடி துறைமுகமொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். 


காயமடைந்த நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.