இலங்கையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளனோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரித்துள்ளது. 

இன்றையதினம் இதுவரையான காலத்தில் புதிதாக கொரோனா தொற்றுக்குள்ளான 18 பேர் இனங்காணப்பட்டனர்.

இனங்காணப்பட்ட 18 நோயளர்களில் 7 பேர் கடற்படையினரும் ஏனைய 11 பேரும் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்களாவர்.

அதற்கமைய இது வரையில் நாட்டில் இனங்காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1548 ஆக அதிகரித்துள்ளதோடு, 754 பேர் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

அத்தோடு தற்போது 776 பேர் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 10 பேர் உயிரிழந்துள்ளனர்.