‘பட்டாஸ்’ படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் ‘D43’ அப்டேட் வெளியாகி இருக்கிறது.

‘பட்டாஸ்’ படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘ஜகமே தந்திரம்’ மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்திருக்கிறார். 

இவற்றில் ‘ஜகமே தந்திரம்’ படம் லொக்டவுனுக்கு பிறகு முதலில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைதொடர்ந்து தற்போது ‘கர்ணன்’ படத்தின் பின்னணி பணிகள் தொடங்கியிருக்கிறது.

இந்நிலையில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், தனுஷ் பெயரிடப்படாத படமொன்றில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். 

தற்காலிகமாக ‘D43’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தின் தற்போதைய நிலை என்ன? என்பது குறித்து ரசிகர் ஒருவர் இயக்குனர் கார்த்திக் நரேனிடமும், படத்தின் இசையமைப்பாளரான ஜீ.வி பிரகாஷ்குமாரிடமும் கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த இயக்குநர் கார்த்திக் நரேன்,“ எக்சன் திரில்லராக தயாராகி வரும் இந்தப் படத்தில் மலையாள திரையுலகின் பிரபலஇரட்டை கதாசிரியர்களான ஷார்ஃப் மற்றும் சுஹாஸ் ஆகியோருடன் இணைந்து திரைக்கதையை நிறைவு செய்து வருகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.  

இது தொடர்பாக பேசிய இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார்,“ இந்த படத்தில் நடிகர் தனுஷ், கதாநாயகனாக மட்டுமல்லாமல், பாடலாசிரியராகவும், பின்னணி பாடகராகவும் பணியாற்றி வருகிறார்.” என தெரிவித்திருக்கிறார்.

‘D43’ படத்தைப்பற்றிய புதிய செய்திகள் வெளியானதால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.