(எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் சுமார் ஒரு மணித்தியாலம் வரை இன்று விசாரணை நடாத்தி வாக்கு மூலம் பதிவு செய்துகொண்டனர். 

நாட்டில் கொரோனா பரவல் நிலைமை தொடர்பில் முகப் புத்தகம் ஊடாக தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறி,  ஊடக சந்திப்பொன்றினை நடாத்தியதாக கூறப்டும் விவகாரம் தொடர்பில் அவரிடம் இந்த விசாரணைகள் நடாத்தப்பட்டன.  

 கடந்த  மார்ச் 18,19 ஆம் திகதிகளில்  வெளியிட்ட கருத்துக்களால்,  பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியதாகக் கூறி பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைவாக இந்த விசாரணைகள்  நடாத்தப்பட்டுள்ளன.

 அதன்படி இன்று  முற்பகல் 10.40 மணியளவில் தெமட்டகொடையில் உள்ள கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவுக்கு சிரேஷ்ட சட்டத்தரணி குணரத்ன வன்னினாயக்கவுடன் ஆஜராகிய  பொன்சேகாவிடம்  விஷேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது.