ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்கும் போது தான் ஆறுமுகனின் ஆத்மா சாந்தியடையும் - தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்

Published By: Digital Desk 4

29 May, 2020 | 10:09 PM
image

மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமானின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமாயின் மலையக மக்களுக்கான ஆயிரம் ரூபா சம்பள உயர்வை உடன் வழங்கும் போது தான்  அவருடைய ஆத்மா சாந்தியடையும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்  பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் இன்று வெள்ளிக்கிழமை (29)  தெரிவித்தார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்   மறைந்த ஆறுமுகன் தொண்டமானிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (29)  மட்டக்களப்பு வாவிக் கரையிலுள்ள கட்சி காரியாலயத்தில் இடம்பெற்றது.

இதில் கட்சியின்   மத்தியகுழுவினர் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் என  பலர் கலந்து கொண்டு மறைந்த ஆறுமுகன் தொண்டாமானின்  உருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மலர் தூவி 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தினர்  

இதன் போது   அங்கு உரையாற்றிய கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் இவ்வாறு தெரிவித்தார்.

ஆறுமுகன் தொண்டமானின் மறைவானது நாட்டில் இருக்கும் சிறுபான்மை சமூக மக்களுக்கு ஒரு பாரிய இழப்பாகும் 1994 ஆம் ஆண்டு நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு சுமார் 70 ஆயிரம் மக்களின் ஆனையினை பெற்று பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு சுமார் 25 வருடங்களாக மலையக மக்களுக்காக குரல் கொடுத்து பாராளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்து குரல்கோடுத்துக் கொண்டிருந்த அவரது மறைவானது உண்மையில் ஏற்றுக் கொள்ள முடியாத மறைவாகும். 

இறுதி நேரம் வரை மலையக மக்களுக்கு  நியாயமான வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்த வேண்டும் என மிக அக்கறையுடன் செயற்பட்ட ஒரு தலைமை அது மாத்திரமல்ல மலையக மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டபோது தொண்டமான் என்கின்ற நாமங்களும் தொழிலாளர் காங்கிரசும் மிக நிதானமாக ஜனநாயக ரீதியாக செயற்பட்டதன் காரணமாக பறிக்கப்பட்ட குடியுருமையை மீண்டும் பெறப்பட்டது என்பது ஜனநாயத்தின் மீது நம்பிக்கை வைத்து செயற்பட்டதனால் தான்.

அது மாத்திரமல்ல பல அரசியல் வாதிகள் மக்களின் வாக்குகளை பெற்று ஆசனங்களை சூடாக்கி கொண்டிருக்கையில் மக்களுக்காக குரல் கொடுத்து கொண்ட ஒரு தலைமை இறப்பதற்கு முதல் நாள் நாட்டின் பிரதமரை சந்தித்து மலையக மக்கள் பிரச்சனை தொடர்பாக கலந்துரையாடியிருந்தார்.

நாட்டின் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு இன்று வேண்டுகொள் விடுத்துள்ளோம் மலையக மக்களுக்காக ஆயிரம் ரூபா சம்பள உயர்வை உடன் வழங்கும் போது தான் அவரின் ஆத்மாசாந்தியடையும். அந்த மலையக மக்களின் சம்பள மற்று அவர்களின் நியாயமான போராட்டத்திற்கு எமது கட்சி உறுதுணையாக இருக்கும் என்பதுடன், 

அவரின்  பிரிவால் துயருற்றிருக்கின்ற இழப்பால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சிக்கும் மலையக மக்களுக்கும்.அவரது உறவினர்களுக்கும்  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் சார்பாகவும் கட்சியின் சார்பாகவும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து அவரின் ஆத்மசாந்திகாக பிராத்திக்கின்றோம் என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08