இலங்கையில் நடைபெற்ற யுத்தகாலத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில் கோரிக்கைவிடுத்துள்ளார்.

யுத்தம் நிறைவடைது 10 வருடங்கள்’ கடந்துவிட்டது இக்காலப்பகுதியில் இடையூறுகளுக்கும் அழுத்தத்திற்கும் உள்ளான தமிழ் ஊடகவியலாளர்களுக்கு இதுவரை நிவாரணங்கள் கிடைக்காத நிலையில் தமிழ் ஊடகவியலாளர்களும் அவர்களது குடும்பங்களும் இன்னமும் பல்வேறு அசௌகரியங்களுடனேயே உள்ளனர்.

இந்நிலையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களது வாழ்வியல் நலன்கருதி நிவாரணங்களை துரிதகதியில் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில் கோரிக்கை விடுத்திருந்தார்.

அமைச்சரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சரவை அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.