கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்தாட்டத் தொடர் எதிர்வரும் ஜூன் மாதம் 17 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு சர்வதேச விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டும், இரத்து செய்யப்பட்டும் உள்ளன.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கபட்ட ஜேர்மனியின் பண்டெஸ்லிகா கால்பந்தாட்ட தொடர், ரசிகர்கள் இல்லாமல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து போட்டி மீண்டும் ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்தாட்டப் போட்டியை ஜூன் மாதம் 17 ஆம் திகதியன்று மீண்டும்  ஆரம்பிக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் நடைபெறும் போட்டியை, ரசிகர்களின்றி  நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பருவக்காலத்தை முழுமையாக நடத்தி முடிக்க இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்தாட்டக் கழக நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.