(இரா.செல்வராஜா)

நாட்டின் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காலம் படிப்படியாக வலுவடைந்து வருகின்றது, நாட்டில் நிலவுகின்ற மழையுடனான வானிலை எதிர்வரும் ஒகஸ்ட்  மாதம் வரை நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக் கூறியுள்ளது.

மத்திய, சப்பிரகமுவ, மேல் இவடமேல் ஆகிய மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்வதுடன் சப்பிரகமுவ, தென் , மேல் ஆகிய மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லி மீட்டருக்கு அதிகமான மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி மொஹம்மட் சாலிஹின் தெரிவித்தார்.

கிழக்கு ஊவா மாகாணங்களிலும் பொலனறுவை மாவட்டத்திலும் பல இடங்களில் இரவு வேளையில் மழை பெய்யுமெனவும் வளி மண்ணடலவியல் திணைக்கள அதிகாரி மேலும் தெரிவித்தார்.