(எம்.மனோசித்ரா)

நுவரெலியா பொலிஸ் நிர்வாக மாவட்டத்தில் இன்று  வெள்ளிக்கிழமை (29) நள்ளிரவு 12.00 முதல் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (31) நள்ளிரவு வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் இன்று  வெள்ளிக்கிழமை பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்ட ஊடக அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய நடவடிக்கைகளுக்காக நுவரெலியா மாவட்டத்துக்குள் போக்குவரத்து நடவடிக்கைகள் அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுகின்றமை தொடர்பில் இறுதியாக வெளியிடப்பட்ட அறிவித்தலுக்கு ஏற்ப ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும். 

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகம் விடுத்து அறிவிப்பில், 

நாளை, மே 30 சனிக்கிழமை நுவரெலியா மாவட்டத்தில் முழு நாளும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்.

நேற்று 28, வியாழன் அறிவிக்கப்பட்டவாறு மே 31, ஞாயிறு நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் முழு நாளும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்.

ஜூன் முதலாம் திகதி திங்கள் முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் விதம் குறித்து நேற்றைய அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட விபரங்களில் மாற்றங்கள் இல்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிடப்பட்டுள்ளது.