மஹேந்திர சிங் டோனி எப்போதும் கடைசி  இரண்டு நிமிடங்கள் மாத்திரம்தான்  ‘டீம் மீட்டிங்’ (அணி கூட்டம்) நடத்துவார் என இந்திய கிரிக்கெட் வீரரான பார்தீவ் பட்டேல் தெரிவித்துள்ளார்.

IPL 2019: Parthiv Patel admits RCB are under the pump but don't ...

சென்னை  சுப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடியுள்ள பார்தீவ் பட்டேல் டோனியுடனான அனுபவங்கள் குறித்து பகிர்ந்துள்ளதாவது,

‘‘டோனி கடைசி இரண்டு நிமிடங்கள் தான் அணியின் கூட்டத்தை நடத்துவார். 2008 ஆம் ஆண்டு ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் கூட கடைசி இரண்டு நிமிடங்கள்தான் கூட்டத்தை நடத்தினார்.

அவர் 2019 ஆம் இறுதிப் போட்டியிலும் அப்படித்தான் அணியின் கூட்டத்தை நடத்தியிருப்பார் என உறுதியாகக் கூறுகிறேன். எந்த வீரரிடமிருந்து எதை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது டோனிக்கு தெளிவாகத் தெரியும்’’ என்றார்.

2008 ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக 13 போட்டிகளில் விளையாடிய பார்தீவ் பட்டேல் 302  ஓட்டங்களை குவித்தார்.

2010 ஆம் ஆண்டு வரை சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய அவர், பின்னர் கொச்சி டஸ்கர்ஸ், டெக்கன் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். 

எனினும், டோனி மீது அதே மதிப்பும் மரியாதையும் இன்னுமும் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.