பாகிஸ்தானில் விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் இருந்து 30 மில்லியன் ரூபா மதிப்புள்ள பணம் மீட்கப்பட்டள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

கடந்த 22 ஆம் திகதி பாகிஸ்தானின் லாகூரில் இருந்து சென்ற விமானம் கராச்சியில் தரையிறங்குவதற்கு முன்பு குடியிருப்பு பகுதியில் விபத்துக்குள்ளானது.

இதில் குழந்தைகள் உள்பட 97 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில், 2 பேர் மட்டும் உயிர் தப்பினர்.

விமானத்தின் இடிபாடுகளில் இருந்து உடைமைகளை எடுத்து உரியவர்களிடம் ஒப்படைக்கும் பணி நடந்து வரும் நிலையில், 2 பைகளில் இந்திய மதிப்பில் 30 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள பல்வேறு நாடுகளின் நாணயத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார். 

பணம் யாருடையது என்றும் விமானநிலையத்தின் பரிசோதனைகளை மீறி இவ்வளவு பெரிய தொகை எப்படி விமானத்தில் எடுத்து வரப்பட்டது என்றும் விசாரணை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.