நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்திருக்கும் ‘டிக்கிலோனா’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருக்கிறது.

(ஃபர்ஸ்ட் லுக்)

‘டகால்டி’ என்ற படத்தைத் தொடர்ந்து நடிகர் சந்தானம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படம் ‘டிக்கிலோனா’ இந்தப்படத்தில் நடிகர் சந்தானம் முதன்முதலாக மூன்று வித்தியாசமான வேடங்களில் நடிக்கிறார். இவருடன் நடிகைகள் அனகா, ஷிரின் காஞ்ச்வாலா, நடிகர்கள் ரோபோ ஷங்கர், ஆனந்தராஜ், முனிஸ்காந்த், ‘நான்கடவுள்’ ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

 இவர்களுடன் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகராக அறிமுகமாகிறார். ஆர்வி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். அறிமுக இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கியிருக்கிறார்.

(செகண்ட் லுக்)

சயின்ஸ் ஃபிக்ஷன் ஜேனரில் தயாராகியிருக்கும் இந்த படத்தில் சந்தானம் மூன்று வேடத்தில் நடித்திருப்பதால் நேற்று முன்தினம் ஃபர்ஸ்ட் லுக்கும் நேற்று  செகண்ட் லுக்கும் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து இன்று  மாலை இப்படத்தின் மூன்றாவது கதாபாத்திரத்திற்காக தோற்றம் வெளியிடப்பட்டிருக்கிறது.

(தேர்ட் லுக்)

படக்குழுவினரின் இத்தகைய புதிய முயற்சிக்கு சந்தானத்தின் ரசிகர்களிடத்தில் ஆதரவு கிடைத்திருக்கிறது. அவர்கள் இதனை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.