இளம் பெண்ணை ஏமாற்றி திருமணமுடித்து தேனிலவில் இருந்த போது மனைவியால்  இரு பிள்ளைகளின் தந்தையொருவர் பிடிபட்ட சம்பவமொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

ஏற்கனவே திருமணமான இரண்டு பிள்ளைகளின் தந்தையான தனியார் நிறுவனம் ஒன்றின் அதிகாரி, தாம் திருமணம் செய்யவில்லை என்று தெரிவித்து 24வயதான பெண் ஒருவரை திருமணம் முடித்து தேன்நிலவில் இருக்கும் போது அவரது முதல் மனைவியால் பிடிக்கப்பட்டார்.

வேறு ஒரு தனியார் நிறுவனத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய 24 வயது பெண்ணை ஏமாற்றி, தனியார் நிறுவன அதிகாரி திருமணம் செய்துள்ளார். இதேவேளை, குறித்த நபரின் மனைவி வைத்தியசாலை ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

கொழும்பு ஹோட்டல் ஒன்றில் தேனிலவில் ஈடுபட்டிருந்த போது, முதல் மனைவி வேறு சிலருடன் இணைந்து ஹோட்டலுக்குள் புகுந்து இருவரையும் பிடித்து  பொலிஸில் ஒப்படைத்துள்ளார்.

இந்நிலையில், குறித்த நபர் தமது தாயாரைப் போன்று நடிப்பதற்காக பெண் ஒருவருக்கு பணம் வழங்கப்பட்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டதாகவும் திருமண நிகழ்வுக்கு பல இலட்சம் ரூபா செலவுசெய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த ஆண், திருமணமானவர் என்று தனக்குத் தெரியாது என நிறுவனத்தின் பணிப்பாளரான 24 வயதான பெண் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.