பார்சிலோனா அணியில் கடந்த சில வாரங்களாக லயனல் மெஸ்ஸி காயம் காரணமாக விளையாடாமல் உள்ளார். ஆனால், அவர் இல்லாத குறையை நெய்மர் மற்றும் சுவாரஸ் ஆகியோர் சிறப்பான முறையில் சரிசெய்து வருகின்றனர்.

நேற்று நடைபெற்ற போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-ஆவது பாதி நேரத்தில் 60-ஆவது நிமிடத்தில் நெய்மர் முதல் கோலை பதிவு செய்தார்.
அடுத்த 10ஆ-வது நிமிடத்தில் சுவாரஸ் ஒரு கோல் அடித்து அசத்தினார்.


85ஆ-வது நிமிடத்தில் நெய்மர் மேலும் ஒரு கோல் அடிக்க, பார்சிலோனா 3-–0 என வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் லா லிகா புள்ளிகள் அட்டவணையில் பார்சிலோனா முதல் இடத்தைப் பிடித்துள்ளது.


நெய்மர் மற்றும் சுவாரஸ் ஆகியோர் சேர்ந்து மெஸ்ஸி இல்லாமல் அணிக்காக 19 கோல்களைப் போட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.