சீஷெல்ஸில் இருக்கும் இலங்கையர்கள் நாடு திரும்ப அரசாங்கம் நடவடிக்கை

Published By: Digital Desk 3

29 May, 2020 | 04:43 PM
image

(எம்.மனோசித்ரா)

சீஷெல்ஸில் வசிக்கும் மற்றும் பணியாற்றும் பல இலங்கையர்களைக் கருத்தில் கொண்டு, நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள விதிமுறைகள் மற்றும் தனிமைப்படுத்தல் வசதிகளுக்கு அமைவாக அவர்கள் இலங்கைக்கு மீளத் திரும்புவதற்கான வசதிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கைச் சமூக உறுப்பினர்களுடன் சீஷெல்ஸிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் தொடர்ச்சியாக தொடர்புகளைப் பேணி வருவதுடன், உதவிகள் தேவைப்படும் இலங்கையர்களுக்கு ஆதரவுகளை வழங்குவதற்காக, இலங்கையின் சங்கம், சீஷெல்ஸ் பௌத்த சங்கம் மற்றும் லக்ஸ்டார் கிரிக்கெட் கிளப் ஆகியவற்றை உள்ளடக்கிய உயர் ஸ்தானிகராலயத்தின் தலைமையிலான இணைந்த குழுவை நியமிப்பதற்கான முன்முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது.

இலங்கைச் சமூகத்தினரின் வேண்டுகோளின் பேரில், அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை விநியோகித்துள்ள உயர் ஸ்தானிகராலயம், இலங்கையர்கள் தொடர்ச்சியாக உயர் ஸ்தானிகராலயத்தைத் தொடர்பு கொள்ளக்கூடிய வகையில் 24 மணிநேர தொலைபேசி அழைப்புச் சேவையையும் நிறுவியுள்ளது.

தொழில் வாய்ப்புக்களை இழத்தல், தொழில் வாய்ப்பு ஒப்பந்தங்கள் நிறுத்தப்படுதல் மற்றும் அவசர மருத்துவ சிகிச்சைக்கான தேவை ஆகியவற்றின் காரணமாக, ஏற்கனவே விமான டிக்கெட்டுக்களை கொள்வனவு செய்துள்ள, இலங்கைக்கு நாடு திரும்புவதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் உயர் ஸ்தானிகராலயத்தில் தம்மைப் பதிவுசெய்த பல இலங்கையர்களுடன் இந்த உயர் ஸ்தானிகராலயம் தொடர்ந்தும் தொடர்புகளைப் பேணி வருகின்றது. தற்போது பலர் சீஷெல்ஸிலுள்ள ஐந்து தீவுகளில் பரவிக் காணப்படுகின்றனர்.

சீஷெல்ஸில் இம்மாதம் 11 ஆந் திகதி வரை கொவிட்-19 தொற்றுக்குள்ளான ஒரேயொரு நோயாளர் மட்டுமே இனங்காணப்பட்டுள்ளதுடன், ஏப்ரல் 6 ஆந் திகதி இனங்காணப்பட்ட கொவிட்-19 தொற்றுக்குள்ளான 11 நபர்களுக்குப் பின்னர் எந்தவொரு தொற்றுக்குள்ளான நபரும் பதிவு செய்யப்படவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17