ஆறுமுகன் தொண்டமானின் மறைவு சிறுபான்மை மக்களுக்கும் இழப்பு – சந்திரகுமார்

29 May, 2020 | 04:40 PM
image

ஆறுமுகம் தொண்டமான் மலையக மக்கள் மீது கொண்டுள்ள கரிசனையை நான் நன்கறிவேன். எனவே அவரின் இந்த திடீர் இழப்பு மலையக மக்களுக்கு பேழிப்பு மட்டுமல்ல இலங்கை வாழ் சிறுபான்மை  மக்களுக்கும் இழப்பே என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் வெளியிட்டுள்ள இறங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது :

தொழிற்சங்கவாதியாக, அரசியல்வாதியாக மலையக மக்களின் நலன்களுக்கும், அவர்களின் முன்னேற்றத்திற்கும், உரிமைகளுக்கும்  தொடர்ச்சியாக செயற்பட்டு வந்து ஆறுமுகம் தொண்டமானின் மரணம் பேரிதர்ச்சி தந்துள்ளது.  இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவராக இருந்த அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் வழியில் அரசியலை முன்னெடுத்தவர் ஆறுமுகம் தொண்டமான்.

மலையக அரசியலில் ஏற்பட்ட புதிய போக்குகளில் இ.தொ.க பலத்த சவால்களை எதிர்கொள்ளவேண்டி ஏற்பட்டது. அந்தச் சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நெருக்கடி ஆறுமுகம் தொண்டமானுக்கும் இருந்தது. அதேவேளை இலங்கை தேசிய அரசியலில் புதிய போக்கும் ஆறுமுகம் தொண்டமானின் அரசியலில் சவால்களை ஏற்படுத்தியது. ஒரே நேரத்தல் இரட்டைச் சவால்களுக்கு முகம் கொடுத்து தன்னுடைய அரசியலை முன்னெடுக்க வேண்டிய சூழலில் ஆறுமுகம் தொண்டமான் இருந்தார். 

இந்த நிலையில் மலையக மக்களின் அரசியலையும் இ.தொ.க அரசியலையும் சமாந்தரமாக முன்னெடுப்பத்தில் அவர் கொண்டிருந்த அக்கறையை நாங்கள் கவனித்துவந்துள்ளோம். அவரும் நானும் சமகாலத்தில் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்திருகின்றோம். 

அந்த வகையில் ஆறுமுகம் தொண்டமான் மலையக மக்கள் மீது கொண்டுள்ள கரிசனையை நான் நன்கறிவேன். எனவே அவரின் இந்த திடீர் இழப்பு மலையக மக்களுக்கு பேழிப்பு மட்டுமல்ல இலங்கை வாழ் சிறுபான்மை  மக்களுக்கும் இழப்பே.

எனவே மறைந்த ஆறுமுகம் தொண்டமானுக்கு அஞ்சலியை செலுத்துவதோடு, அவரின் குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எமது ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கின்றேன். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணேமுல்ல சஞ்சீவவின் பிரதான சகா அதிரடிப்படையினரால்...

2022-11-27 10:41:55
news-image

உரிமை போராட்டத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கான நினைவேந்தலை...

2022-11-27 10:33:22
news-image

நந்திக்கடலில் மாவீரர்களுக்கு மலர்தூவி அஞ்சலி செய்தார்...

2022-11-27 10:18:02
news-image

ரோவின் தலைவர் கொழும்பில் ஜனாதிபதியையும் பசிலையும்...

2022-11-27 10:11:09
news-image

மாவீரர்களை நினைவுகூர்ந்து முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு வர்த்தக...

2022-11-27 10:09:30
news-image

வடக்கில் இன்று மழை பெய்வதற்கான சாத்தியம்

2022-11-27 10:04:23
news-image

இன்று மாவீரர்களுக்கான நினைவேந்தல் ! வட,...

2022-11-27 09:40:13
news-image

இன்று மின்துண்டிப்பு அமுலாகும் நேர அட்டவணை

2022-11-27 09:39:21
news-image

13 ஐ நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் ஆர்வமாக...

2022-11-27 09:37:55
news-image

பங்களாதேஷ் பிரதமருடன் அமைச்சர் அலி சப்ரி...

2022-11-27 09:37:03
news-image

கோட்டாவை தவறாக வழி நடத்துபவர்கள் இன்னமும்...

2022-11-27 10:18:41
news-image

பாகிஸ்தான்  உயர்ஸ்தானிகருக்கு வடக்கு மக்கள் மீது...

2022-11-27 08:56:26