(இரா.செல்வராஜா)

ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்துவத்திலிருந்து எம்மை இடைநிறுத்த முடியாது.கட்சியின் செயற்குழுவின் பெரும்பான்மை எமக்கே உள்ளது.

எம்மை கட்சி அங்கத்துவத்திலிருந்து இடைநிறுத்தி இருப்பது தொடர்பாக எதிர்காலத்தில் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

திஸ்ஸ அத்தநாயக்க ஐக்கிய தேசியக் ...

இது குறித்து அவர் மேலும் தெரிவித்தாவது,

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் 60 பேர் அங்கம் வகிக்கின்றனர். இவர்களில் 40 பேர் ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்தவர்கள்.

வெறும் 20 செயற்குழு உறுப்பினர்களால் எம்மை கட்சியிலிருந்து நீக்க முடியாது. இதை தவிர ஐக்கிய தேசியககட்சியின் செயற்குழுவின் அங்கிகாரத்துடனே ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டு தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கப்பட்டது.

இது தொடர்பான எழுத்து மூல ஆவனங்கள் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் உள்ளது. ஐ.தே.க.விலிருந்து 97 உறுப்பினர்கள் விளக்கப்பட்டிருப்பதாக அறிகிறோம்.

எனினும் அது குறித்து எமக்கு சட்டபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. உத்தியோகப்பூர்வ அறிவிப்பு கிடைக்கப்பட்ட பின்னர் சட்ட நடவடிக்கை எடுப்போம். ஐ.தே.க. செயற்குழுவின் பெரும்பான்மை எமக்கே உள்ளது. அதனால் எங்களை அவர்களால் கட்சியிலிருந்து நீக்க முடியாது என்றார்.