அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த டுவிங்கிள் என்ற நாய் 100 பலூன்களை வெறும் 39.08 நொடிகளில் உடைத்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளது. 

கடந்த ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த தி ஓண்டர் என்ற நாய்  100 பலூன்களை 41.67 நொடிகளில் உடைத்து கின்னஸ் உலக சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தி ஓண்டரின் உரிமையாளர் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள செய்தியில், புதிதாக சாதனை படைத்துள்ள டுவிங்கிளுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார். 

மேலும் விரைவில் இந்த சாதனை முறியடிக்க தனது நாய்க்கு தீவிர பயிற்சி வழங்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.