கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாமல் பிரித்தானியாவில் சிக்கித்தவித்த 221 பயணிகள் இலங்கை வந்துள்ளனர். 

இவ்வாறு பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்தவர்கள் இலங்கையர்கள் அல்லவெனவும் அவர்கள் அனைவரும் சீனர்கள் எனவும் குறித்த 221 பேரும் சிறிது நேரத்தில் சீனா நோக்கி புறப்படவுள்ளனர் எனவும் ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ் தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸிற்கு சொந்தமான யூஎல் -504 சிறப்பு விசேட விமானம் மூலம் குறித்த 221 பேரும் இன்று நண்பகல் 12.25 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.