கொரோனா வைரஸ் தொற்றையடுத்து இந்தியாவில் இருந்து இலங்கை வந்த நிலையில் மீண்டும் சொந்த நாடு செல்லமுடியாது இலங்கையில் தங்கியிருந்த இந்தியர்களை அழைத்துச்செல்ல இந்தியன் ஏயார் லைன்ஸ் விமானம் இலங்கை வந்துள்ளது.

இவ்வாறு இலங்கையில் சிக்கியிருந்த 170 இந்தியர்களை அழைத்துச் செல்லவே குறித்த இந்தியன் ஏயார் லைன்ஸ் விசேட விமானம் இன்று காலை கட்டு நாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இந்தியாவின் மும்பையில் இருந்து எவ்வித பயணிகளும் இன்றி இன்று காலை 10.45 க்கு வருகை தந்த குறித்த விமானம், இலங்கையில் இருந்து குறித்த 170 இந்தியர்களையும் அழைத்துக்கொண்டு இன்று மதியம் மீண்டும் இந்தியாவுக்கு புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.