ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் கீழ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த 99 ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை நீக்க ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழு இன்று தீர்மானித்துள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கட்சியுடன் மீண்டும் இணைய விரும்பி செயற்படுபவர்களை இணைத்துக்கொள்வதில் எவ்விதமான பிரச்சினையும் இல்லையெனவும் ஆனால் அது செயற்குழுவின் பெரும்பான்மையின் பிரகாரமே இடம்பெற வேண்டும் என்று கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய மக்கள் சக்தியில் வேட்புமனு தாக்கல் செய்த ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பன ர் 99 பேரின் கட்சி உறுப்புரிமையே இவ்வாறு இடைநிறுத்த தீர்மானித்துள்ளது.

இது குறித்து கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எடுத்த முடிவுக்கு செயற்குழு இன்று ஏகமனதாக அனுமதி அளித்துள்ளது.

எவ்வாறாயினும், ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பாலான உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இருப்பதான் காரணத்தால் இத்தீர்மானத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் நிறைவேற்ற முடியாதென ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.